KOLNews

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது..! - தமிழக அரசு உறுதி

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை  ஒருபோதும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்துவிட்டது.

சுற்றுசூழலை கெடுப்பதுடன், பல வியாதிகளுக்கு வழிவகுக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்‍கோரி அப்பகுதி மக்‍கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். எவ்வித அரசியல் தூண்டுதலும் இன்றி சுய எழுச்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்‍கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதையடுத்து, தமிழரசி உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசின் உத்தரவுக்‍கு தடை விதிக்‍க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆலையை திறக்க தடை தொடரும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் உச்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது ஆலையை திறக்‍க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 

அத்துடன், , ஆலையை இடைக்‍காலமாக திறக்‍க அனுமதி கோர கூட அந்நிறுவனத்திற்கு எவ்விதமான முகாந்திரமும் கிடையாது எனவும் தமிழக அரசு உறுதியாக தெரிவித்தது. அதன் பின் வழக்‍கு விசாரணை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்‍கப்பட்டது.

English Summary

Can't open Sterlite plant ..! - Government of Tamil Nadu

Latest Articles

KOLNews