KOLNews

உஷார்..! - அடுத்த 2 நாட்களுக்கு 'தம்' அடிக்காதீர்கள்..!

கொரோனா தொற்று காலத்தில், நுரையீரல் , கணையம் போன்ற உள்ளுறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அவற்றிக்கு பாதிப்பை உண்டாகும் எந்த தீயபழகத்தையும் கைவிடுவதே முதல் செயலாக இருக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை 10 நாட்களுக்கு தொடர்ந்தால் அப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றனர் . 

புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டால் ஒரே வருடத்தில் ஹார்ட் அட்டாக் பாதிப்பை பாதியாகக் குறைத்து விடலாம் . புற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர் புகைக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டால் புற்று நோயின் தாக்குதல் படிப்படியாகக் குறைந்து குணமடையும் . புகையில் உள்ள நச்சுப் பொருளான நிக்கோடின் இரத்த நாளங்களில் கொலாஸட்ரல் மற்றும் கொழுப்புசத்துக்களை கரையவிடாமல் தடுக்கிறது . கார்பன் மோனாக்சைடு இரத்தத்தில் கலந்து ஆக்சிஜனின் செயல்களைத் தடுக்கிறது . கார்பன் நுரையீரலின் உட்புறம் மெல்லிய சவ்வுபோல படிந்து அதன் செயல்பாட்டைத் தடுக்கிறது . மாரடைப்பு எல்லோருக்கும் வரலாம் . ஆனால் புகைப்பிடிப்பவருக்கு அதன் தாக்கம் ஒன்பது மடங்கு அதிகமாகும் . 

What RTs Can Do to Keep Smokers from Losing Hope - AARC

அப்படி என்றால் புகைப்பதை விடுவது எப்படி..?

இனி மேல் நான் புகைக்கவே  மாட்டேன் என உறுதி மொழி எல்லாம் எடுத்துக்கொண்டால் , அவை இரண்டு நாளுக்கு மேல் தாங்காது. ஆகவே அடுத்த 2 நாட்களுக்கு மட்டும் புகைக்காமல் இருந்து பார்க்கிறேன் என்று மனக்கட்டுப்பாடுடன் இருங்கள். பின் இரண்டு நாள் புகைக்காமல் இருந்ததாள் வரும் நம்பிக்கையில் மேலும் ஒரு வாரம் தொடருங்கள்..பின் உங்களுக்கே 'சரி விட்டது விட்டுவிட்டோம்.. அப்படி விட்டுவிடுவோம்', என தோன்றும்.  மற்றபடி, புகையை நிறுத்த மருந்து சாப்பிடுவது, புத்தாண்டு உறுதிமொழி எடுப்பதெலாம் நடைமுறையில் யாருக்கும் பெரும் பலனளித்ததாக தெரியவில்லை. ஆகவே முதலில் அடுத்த 2 நாட்களுக்கு புகைக்காதீர்கள். 

English Summary

Caution ! - Do not smoke for the next 2 days ..!

Latest Articles

KOLNews