KOLNews

10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் இல்லாத தேர்ச்சி சான்றிதழ்..! - குழப்பத்தில் பள்ளிக்கல்வித்துறை..!

கொரோனாவைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தேர்வுகள் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. அதனையடுத்து தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்ப வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது 

அதே போல, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்இ  பொதுத்தேர்வுகள் ரத்து  செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததும் , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேரவாத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில், 10ஆம் வகுப்புக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததாலும், வெறும் 2 மாதங்களே வகுப்புகள் நடைபெற்றதால், முந்தைய ஆண்டில் 9ஆம் வகுப்பிற்கு தேர்வுயொன்றி தேர்ச்சி அளிக்கப்பட்டதாலும், இறுதி மதிப்பெண்களை எந்த வகையில் கணக்கெடுப்பது என்பதில் பள்ளிக்கல்வி துறை ஏக குழப்பத்தில் உள்ளது. 

இதற்கு ஒரே வழியாக மதிப்பெண்கள் குறிப்பிடப்படாத தேர்ச்சியை மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒப்புதலுக்கு சென்றுள்ள இந்த சான்றிதழ் முறை அனுமதி கிடைத்த பின் உரிய அறிவிப்பு வரும் என தெரிகிறது. 

English Summary

Certificate of no pass for 10th class ..! - School education in confusion ..!

Latest Articles

KOLNews