KOLNews

சுழற்சி முறையில் வகுப்புகள்.? - அமைச்சர் அன்பில் புது தகவல் ..!

நேற்று சென்னையில் தேசிய நூலக தினத்தையொட்டி நடைபெற்ற சென்னை நூலக சங்கத்தின் பொதுக் கூட்டத்தில்,  சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினார்  கௌரவித்தார் .

அதன் பின்  செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்கள் சீரமைக்கப்படும் .தமிழகத்தில் வரும் செப் .1 - ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார் . ஒரு வகுப்பில் 40 பேர் இருந்தால் 50 சதவீதம் அதாவது 20 பேர் ஒரு நாளும் , மற்ற 20 பேர் மறுநாளும் வருவதுதான் சுழற்சி முறை வகுப்புகள் .

Live Chennai: State Minister Anbil Mahesh regarding reopening of  schools!,State Minister Anbil Mahesh regarding reopening of schools!

இதுகுறித்த விவாதம் தொடக்க நிலையில் உள்ளது . நீட் தேர்வுக்கான பயிற்சிகள் , ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பாடம் என்ற வகையில் அளிக்கப்பட்டு வருகின்றன . ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கும் சி வகுப்புகள் நடைபெறுகின்றன . இணையவழியில் மாணவர்களின் சந்தேகங்களும் தீர்க்கப்படுகின்றன . நீட் தேர்வு விலக்கு என்ற நிலையில்தான் அரசு இருக்கிறது . அதனால்தான் , ஏ.கே.ராஜன் கமிட்டி உள்ளிட்ட சட்ட போராட்டங்களைத் தமிழக அரசு செய்து வருகிறது என்றார்..

இதற்கிடையே,  தமிழகத்தில் பள்ளிகள் செப் .1 - ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால், அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள் , பள்ளிகளின் தயாரிப்புகள் எப்படி இருக்க வேண்டும் , முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் , பாடத்திட்டம் குறைப்பு ஆகியவை குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னை டிபிஐ வளாகத்தில் ஆணையர் நந்தகுமார் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

English Summary

Classes in rotation.? - Minister Anbil new information ..!

Latest Articles

KOLNews