KOLNews

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்று பாதிப்பினால் காலமானார். அவருக்கு வயது 74.

முன்னதாகா கொரோனா தொற்றால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஆரம்பத்தில் நடிகர் பாண்டு, திரை துறையை சேர்ந்தவர்களுக்கு தேவையான விருதுகள், கேடயங்களை தயாரித்து அளித்தவர். 'கேபிடல் லெட்டர்ஸ்' என்னும் விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்த அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அதிமுக உருவாக்கப்பட்ட போது, அதன் கோடியை வடிவமைத்தவர் நடிகர் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நகைச்சுவை நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் உடன் பிறந்த தம்பி ஆவார்.

கொரோனாவால் பாண்டு மரணமடைந்த நிலையில், அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

English Summary

Comedian Pandu dies on Corona ..!

Latest Articles

KOLNews