KOLNews

தொடரும் துயரம் ..! நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை..!

.' நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை : 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என விளம்பரம் தரும் நிலைக்கு தமிழகம் 'நீட்' தேர்வினால்  தள்ளப்பட்டுள்ளது, 

கடந்த சில தினங்களுக்கு முன் தனுஷ் என்கிற மாணவன் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வின் துயரம் அகலாத நிலையில், அரியலூர் மாவட்டம் , விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்கிற மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருணாநிதி, மற்றும் ஜெயலெட்சுமி தம்பதி. இவர்கள் இருவருமே வழக்குரைஞர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் கனிமொழி , நாமக்கல் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து , 600 - க்கு 562.28 மதிப்பெண் பெற்றிருந்தார் . 

இந்நிலையில், மருத்துவராக வேண்டும் என்ற ஆவலில் அவர் தஞ்சாவூரில் தாமரை இன்டர் தடுப்பூசி எண்ணிய நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த கனிமொழி,  தனது தாய் ஜெயலட்சுமியிடம் நீட் தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி புலம்பியுள்ளார் . அத்துடன், இந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியுமா என்ற மன உளைச்சலில் இருந்துள்ள கனிமொழி திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. 

நீட் தேர்வு குறித்த மன அதிர்வுகளால் மாணவி  அனிதாவில் ஆரம்பித்த இந்த தற்கொலை நிகழ்வுகள்  , தற்போது மாணவி கனிமொழி வரை தொடர்வது, நீட் தேர்வு குறித்த பல்வேறு உளவியல் கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. 

 

English Summary

Continuing tragedy ..! Another student commits suicide due to fear of NEET exam ..!

Latest Articles

KOLNews