KOLNews

மதுரை எய்ம்ஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியல் வெளியீட்டில் சர்ச்சை ..!

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்த நிலையில் தற்போது அதற்கு உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமிக்கப்படுகிறார். அத்துடன்,  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பொது இயக்குனர், நிறுவன இயக்குனர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினராக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Accused of lewd act, ABVP chief Dr Shanmugam Subbiah appointed AIIMS nominee

இந்நிலையில், இந்த உறுப்பினர்கள் பட்டியலில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் சண்முகம் சுப்பையா உறுப்பினராக  நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தயுள்ளது  அண்மையில் அவர் தனது பக்கத்துக்கு வீட்டு பெண் மீதுள்ள முன்பகையால் , அந்த பெண் வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததுடன் , மிக மோசமான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

English Summary

Controversy over release of list of Madurai AIIMS chairman and members ..!

Latest Articles

KOLNews