KOLNews

இந்தியன் -2 படப்பிடிப்பில் 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்து..! - மூவர் உயிரிழந்த சோகம்

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் படம் இந்தியன் - 2.  நேற்று இதன் படப்பிடிப்பு தளத்தில், 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இது படக்குழுவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்த்திரை உலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Image result for indian 2 poster

படத்தில் இடம்பெறவுள்ள  பாடல் காட்சிக்காக, பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள், நேற்று மாலை முதல் நடந்து வந்தன. அப்போது, ராட்சத 'கிரேன்' ஒன்று, அறுந்து விழுந்ததில், ஒரு உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் காயமடைந்த 10 பேர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

English Summary

'Crane' crashes while shooting Indian-2 - The tragedy of the trio's death

Latest Articles

KOLNews