KOLNews

அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..! - முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் திடீர் தற்கொலை..!

தமிழகத்தை சேர்ந்த வி.பி.சந்திரசேகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  இவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இது குறித்து காவல் துறை தரப்பில் சொல்லப்படுவதாவது...

57 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர்சென்னை மயிலாப்பூர் விஸ்வேஷ்வரபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில்,  வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவர், வெகு நேரம் திரும்பி வராத காரணத்தால்  சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அங்கு அவர் சந்திரசேகர் மின் விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப்  பார்த்து அதிர்ச்சி அடைந்து, பின்  மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலையடுத்து அங்கு விரைந்த  மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்தில சந்திரசேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காவல்துறை உயர் அதிகாரிகள், சந்திரசேகர் இறப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சந்திரசேகர்  7 சர்வதேச போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். தவிர, அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் வீரர்களிடமும் கிரிக்கெட் ரசிகர்களிடமும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English Summary

Cricket fans in shock ..! - Former cricketer VP Chandrasekhar commits suicide

Latest Articles

KOLNews