KOLNews

கை கொடுக்கும் சி.எஸ்.கே..! - 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்-அமைச்சரிடம் வழங்கியது..!

வடமாநிலங்களில் நிலவிய ஆக்சிஜன் தட்டுபாட்டால், நிலமை கைமீறி சென்றதுடன், அங்கு பிணங்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி நாட்டையே அச்சத்துக்கு உள்ளாக்கியது. 

அத்துடன் நாட்டின் தேவையை உலகிற்கு உணர்த்திடும் வகையில் அக்காட்சிகள் இடம்பெற்றன. அதையடுத்து உலகெங்கிலும் இருந்து கொரோனா நிவாரண உதவிகள், வந்த வண்ணம் உள்ளன. உள்நாட்டிலும் தனியார்களும், திரை துறையினரும், சில வணிக நிறுவங்களும் தங்களது பங்களிப்பாக பல உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்த வகையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதை கருத்தில் கொண்டு 450 ஆக்சிஜன் செறிவூட்டி எந்திரங்களை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. 

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் சார்பில் அதன் இயக்குனர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் அதிகாரி பி.எஸ்.ராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினர்.

English Summary

CSK giving a hand ..! - Presented 450 oxygen concentrators to the First Minister ..!

Latest Articles

KOLNews