KOLNews

'மானாட மயிலாட' புகழ்.. டான்ஸ் நடிகர் கார் விபத்தில் மரணம்..!

நடிகர் மனோ (வயது 37). இவர் தனியார் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராக பிரபலமானவர். மேலும் ‘புழல்’ உட்பட பல படங்களிலும் நடித்து உள்ளார். 

மேடை நிகழ்ச்சிகளையும்  நடத்தி வந்தார்.இவர் சென்னை கொரட்டூர், பாபாநகர் 10-வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி லிவியா. 

கடந்த 27-ந்தேதி இரவு மனோ மனைவியுடன் காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கார், வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. 

இதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த அவரது மனைவி லிவியா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English Summary

Dance actor dies in car accident

Latest Articles

KOLNews