KOLNews

நெற்றியில் கருமையா..? - இதை செய்து பார்க்கலாம்..!

சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் நேற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் கருப்பு நிறம் தோன்றி, தடித்து அரிப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த கருப்பும், தடிப்பும் பரவி வருகிறது . இதற்கு கண்ட மருந்துகளை தடவே நோய் குணமாகாது தவிப்பதை நாம் கண்டு வருகிறோம்.

இப்படி ஏற்படுவதின் முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் குங்குமம், திருநீறு இவைகளே ஆகும்.  இப்படிப்பட்ட பொருட்களில் கலந்து இருக்கும் ரசாயனங்கள் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை.அதனால் குங்குமம் திருநீறு வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

இந்த கருப்பு நிறத்தை போக்கும் மருந்தை நாமே தயாரிக்கலாம். 

அதற்கு தேவையானவை - மஞ்சள் 100 கிராம், நிலவேம்பு 100 கிராம், மருதோன்றி இலை 100 கிராம்.

 செய்முறை - மஞ்சளையும் நில வேம்பையும் பொடித்து, சலித்துக்கொள்ளவும். மருதோன்றி இலையை மைபோல் அரைத்து, அத்துடன் மஞ்சள் நிலவேம்பு பொடிகளையும் நன்கு பிசைந்து, வடை போல தட்டி, நிழலில் உலர்த்தி, பின் மீண்டும் இடித்து கொள்ளவும்.  தேவையான அளவு மருந்தை எடுத்து வெந்நீரில் சந்தனம் போல் குழைத்து, நெற்றியில் நோய் உள்ள இடத்தில் அகலமாகப் பொட்டு போல கனமாக வைத்துக்கொள்ளவும்.  இரவில் வைத்து காலையில் கழுவலாம்.  தொடர்ந்து 20 நாட்களுக்கு மருந்தை பயன்படுத்தி வர நெற்றியில் ஏற்பட்ட கருப்பும் தடிப்பும் குணமாகும்

English Summary

Dark on the forehead ..? - Let's try this ..!

Latest Articles

KOLNews