KOLNews

'டேட்டா அனலிடிக்ஸ்' படிப்பின் அவசியம்..!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பை அள்ளித் தரும் M.Sc  Data Analytics என்ற புதிய பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது

Manonmaniam Sundaranar University, Tirunelveli - Admissions 2020-2021

கூகுளில், நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தேடினால் ,அடுத்த வினாடியில் அது தொடர்பான பல்வேறு விஷயங்கள் பல்வேறு வகையில் நமக்கு கிடைக்கிறது.  மேலும், அது தொடர்பான தகவல் நம்முடைய முகநூல் போன்றவற்றிற்கும் அனுப்பப்படுகிறது.  இதற்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது தான் தரவுப் பகுப்பாய்வு என்னும் நான் தேடிய விஷயத்துக்கு நமக்கு பல்வேறு வகைகளாக பிரித்து அனுப்பும் டேட்டா டெக்ஸ்ட் இணைய உலகில் தேவையாக மாறியுள்ளது.

Why Data Analytics is Gaining HYPE in the 21st Century

மென்பொருள் உலகில், புதிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்று அதிகம் உச்சரிக்கப்படும் சொல் 'டேட்டா அனலிடிக்ஸ்',  என்னும் தரவு பகுப்பாய்வு தான். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிக ஊதியம் கிடைப்பதால், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மென்பொருள் தொழில்நுட்ப உலகை வியாபித்துள்ள டேட்டா அனாலிடிக்சை  மையமாகக் கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் M.Sc Data Analytics எனும் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

 தரவுகளை தேர்ந்தெடுக்கும் வகைகள் தரவுகளை தூய்மை செய்து சுத்திகரித்தல், தரவுகளை பார்வையிடும் வகைகள், தரவுகளை ஆய்வு செய்யும் வகைகள், ஆய்வு செய்து தரவுகளில் இருந்து பெறப்படும் தகவல்களை சரியான முறையில் புரிந்து கொள்ளுதல். மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன

தரவு பகுப்பாய்வு என்னும் 'டேட்டா அனலிடிக்ஸ்' தொழில்நுட்பம் படித்தவர்களுக்கான தேவைகளும், வேலைவாய்ப்புகளும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, நிதி நிர்வாகம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ தொழிற்சாலைகள், விவசாயம், அரசுத்துறைகள், ஊடகம் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மிக அதிகமாக உள்ளன.

The 10 Hot Data Analytics Companies To Watch In 2020

 இப்படிப்பில் சேர தகவல் தொழில்நுட்பம் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல் கணினி பயன்பாட்டியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் அல்லது கணிதம் புவியியல் பாடத்தை கொண்ட ஏதாவது ஒரு துறையில் இளம் அறிவியல்(B.Sc)  பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பிஇ பிடெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மொத்த இடங்கள் 20. பல்கலைக்கழக இணையதளம் www.msuniv.ac.in மூலம் விண்ணபிக்கலாம் ,  இணையத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். தற்போது ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் 

English Summary

'Data Analytics' course required ..!

Latest Articles

KOLNews