KOLNews

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு - இலங்கை அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

இலங்கை.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நள்ளிரவில் இடிக்கப்பட்டது. இலங்கை அரசின் இந்த நடவடிக்‍கை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக,நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்படடிருந்தது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடிக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நேற்று நள்ளிரவில் அவசர அவசரமாக இடிக்கப்பட்டது. அப்போது, பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு ராணுவத்தினர் குவிக்‍கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை ,மதிமுக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் கடுமையாக கண்டித்துள்ளன.

English Summary

Demolition of Mullivaikkal Memorial - Condemnation on the Government of Sri Lanka

Latest Articles

KOLNews