KOLNews

'பல்' பராமரிப்பு ..! - தெரிந்துகொள்ள வேண்டியவை..!

நம் முன்னோர் காலத்தில் பற்களை கை விரலால் அல்லது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் துலக்குவது வழக்கம். ஆனால் இந்தக்காலத்தில் ஒரு வயது சிறுவர்கள் முதல் 80வயது பெரியவர்கள் வரை பல் தேய்ப்பதற்கு பிரஷ்களையே உபயோகிக்கிறார்கள். 100க்கு 90 சதவீதம் பேர் பற்பொடி, பற்பசை இவற்றைக் கொண்டே பற்களை சுத்தம் செய்கின்றனர். சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு சாம்பல், செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வது பற்களுக்கு கெடுதலை உண்டு பண்ணும். அதனால் பல்வலி, ஈறு வீக்கம், சீல்வடிதல் போன்றவை ஏற்பட்டு வாய் துர்நாற்றம் வீசக்கூடும்.

இவ்வாறு இல்லாமல் பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பளிச்சென இருக்கும்படியும் செய்வதற்கான சில குறிப்புகள் :

How you can prevent bleeding gums when brushing teeth

பல் தேய்க்கும்போது ஈறுகளை முதல் விரலை கொண்டு (ஆள்காட்டி விரல்) மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து வந்தால் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.. அதே போல, பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களிலுள்ள கறை நீங்கும்.ஆரஞ்சுப் பழத் தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக் கொண்டு பல் தேய்த்து வர பற்களின் கறை நீங்கும்.

How often do you eat sugarcane? | The New Times | Rwanda

கரும்பைச் சாப்பிட்டால் பற்கள் சுத்தமாகி பலம் பெறும்., எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர பற்கள் பளிச்சென மாறும்., பல் தேய்க்கும் பிரஷ்ஷில் உப்பைத் தொட்டு எலுமிச்சை சாறு சில சொட்டுகளையும் சேர்த்து பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும். முல்தாணி மட்டியை பற்களின் மேல் தேய்த்து வந்தாலும் மஞ்சள் கறை நீங்கும். புதினா இலையை காய வைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல் துலக்கி வந்தாலும் பற்கள் பளிச்சென மாறும்.

எலுமிச்சை பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளவென மாறும். கேரட்டை பச்சையாக கடித்து உண்பது பற்களுக்கு பலன் தரும். கிராம்பை வாயில் மென்று வர வாய் நாற்றம் அகலும்.

Can You Brush Your Teeth Too Much? | Lyme Road Dental

கடைபிடிக்க வேண்டியவை - 

* 3 மாதங்களுக்கு ஒரு தடவை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

* பற்களைத் தேய்ப்பதோடு, நாக்கையும் பிரஷ்ஷால் லேசாகத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். நாக்கைத் தேய்ப்பது மூலம் நாக்கு சுத்தப்படுத்தப் படுவதோடு வாய் நாற்றமும் நீங்கும்.

* சாப்பிட்ட பின்பு நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் உப்பு கலந்த நீரினால் கொப்பளிப்பது எந்தவிதமான பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.

English Summary

'Dental' care ..! - Things to know ..!

Latest Articles

KOLNews