KOLNews

ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு வேண்டாம்..! - வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்

இரவு நேர ஊரடங்கு , ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றைமுடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . 

முன்னதாக இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பட்டியலிட முடியாத தாக்கத்தை அடித்தட்டு வணிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது . கடந்த கால பாடங்களில் இருந்து அரசு நெறிமுறைப்படுத்த வேண்டியது விழிப்புணர்வு , மக்களின் சுயக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மட்டுமே . 

தடுப்பூசி போட்டுக் கொள்வது , முகக்கவசம் அணிதல் , இரவு நேர ஊரடங்கு , ஞாயிறு முழு ஊர மற்றும் மருத் முன்னெச்சரிக்கை ஆகியவை எல்லாம் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை . இங்கிலாந்து , ஜெர்மனி , ஸ்பெயின் , இஸ்ரேல் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன . மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசி கட்டாயமல்ல என்று தெரிவித்துள்ளது . இக்கருத்துகளை கவனத்தில்கொண்டு , முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய பரிசீலனை செய்து , இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக சுய கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து , பொருளாதார முடக்கத்தை மேலும் நீட்டிக்காமல் , தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு , ஞாயிறு முழு ஊரடங்கு போன்றவற்றை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் . அரசு அறிவித்த அபராத உயர்வுத் தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஏ.எம்.விக்கிரமராஜா 

English Summary

Do not curfew on Sunday and night ..! - Request of Merchants Associations

Latest Articles

KOLNews