KOLNews

உங்களுக்கு ..இதை விட மகிழ்ச்சி வேறேதும் உண்டா..?

ஒரு செல்வந்தர் ஜென் துறவி சென்காய் என்பவரிடம் வந்து, “எங்களது தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் இருக்க ஏதாவது வழிவகை செய்யும் வகையில் அருள்வாக்கு ஏதேனும்  எழுதிக்கொடுங்கள்'' என்று கேட்டார்.

உடனே, சென்-காய் ஒரு காகிதத்தை எடுத்து, "தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இறக்க!'' என்று எழுதிக்கொடுத்தார். அதை பார்த்த செல்வந்தர் திடுக்கிட்டார். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கத்தான் உங்களிடம் அருள்வாக்கு கேட்டேன். ஏன் இப்படி எழுதிவிட்டீர்கள்,'' என்று விரக்தியுடன் கேட்க,  சென்-காய் அமைதியாக, "இதில் குற்றம் ஒன்றும் இல்லை. உனக்கு முன் உன் மகன் இறந்தால் அது உனக்கு துன்பத்தைத் தரும், உன் பேரன் இறந்தால் அது உனக்கும் உன்மகனுக்கும் பெரும் துன்பமாகும். உனது வம்சம் தறைமுறை தலைமுறையாக நான் ஒழுங்கில் நடைபெற்று வந்தால், அதுவே இயற்கையான வாழ்வுமுறை. அதைத் தான் எழுதி அளித்திருக்கிறேன்'' என்றார்.

When A Simple Question Becomes A Knotty Problem – A Zen Story

ஆமாம், நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருக்கும் பல நல்ல விஷயங்களை கொண்டு நாம் திருப்தி அடையாமல், மகிழ்ச்சி என எதையாவது ஒரு கற்பித்ததை உருவாக்கிக்கொண்டு அலைகிறோம். இயற்கையின் நியதிப்படி ஒருவருக்கு வாழ்க்கை அமைந்தால்,  அதுவே நிறைவான ஒன்று தான்.

English Summary

Do you have any other happiness than this ..?

Latest Articles

KOLNews