KOLNews

தெரியுமா..? நீங்கள் படும் துன்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்..!

ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என நொந்து கொள்பவரா நீங்கள்..?  நிகழ் காலத்தில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பினும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு துன்பங்கள் , இடர்பாடுகள் உள்ளதென்றால் என்ன காரணம் என யோசித்து பார்த்ததுண்டா.? 

அது நீங்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தினால் வந்த சாபமாக இருக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இப்படி பட்ட சாபங்கள் மொத்த‍ம் 13 வகையானவை 

1) பெண் சாபம் 

Image result for cheating woman

பொதுவாக  பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியுமாம்.

2) பிரேத சாபம் 

இறந்த போன ஒருவரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்

வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது,

மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.

இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்

Image result for rituals to ancestors hinduism

நம் மூதாதையர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.

இதனால் வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்

பசு மாட்டை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம் 

கோபத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்

Image result for water pollution in chennai river

பலர் அருந்தக்கூடிய நீரை மாசு படுத்துவதும் , ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.

கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோயை  உண்டாக்கும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை பழிப்பது  போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்

Image result for muni god tamilnadu

காவல் தெய்வங்கள், மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் 

Image result for kula deivam god

முன்னோர்கள் கொண்டாடியது குலதெய்வம். அதை தொடர்ந்து வழிபட வேண்டும் .குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

இவை அனைத்தையும் போல்,  மாற்றாரை துன்பபடுத்தியதனால்,  அவர்கள் ஆற்றாமல் அழுது, அவர்களின் பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட நபர்களையும் அழித்து விடும்.

ஆகவே நல்லதை நினைப்பதும்..நல்லதையே செய்வதுமே சிறந்தது.

English Summary

.. Do you know? This may be one of the reasons for your suffering ..!

Latest Articles

KOLNews