KOLNews

அடிக்கடி எதையாவது மறந்துவிடுகிறீர்களா..? - இதை செய்யுங்கள்..!

"மறதி..ஒரு தேசிய வாதி" , என ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் மக்களை பார்த்து அறிவுஜீவிகள் சொல்லுவதுண்டு.

இந்த மறதி என்பது அனைவருக்கும் உள்ள ஒரு குறைபாடு தான், அந்த அறிவு ஜீவிகள் உட்பட.

ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்களை பார்த்து, அவர்களுக்கு நினைவாற்றல் அதிகம் என சொல்லுவதுண்டு. ஞாபகம் ஒரு 'ஆற்றல்' என்றால், மறதி ஒரு 'குறைபாடு' தானே..! என நினைக்கலாம். உண்மையில் இரண்டுமே கொஞ்சம் மிகைப்படுத்தும் சொற்றொடர்கள் தான். முன்னது  ஆற்றலும் இல்லை, பின்னது குறைபாடும் இல்லை..

நாம் ஒரு விஷயத்தை எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்து தான் நமது ஞாபகம், மறதி எல்லாம்.

இருப்பினும் நம் அன்றாட வாழ்க்கையில் இந்த மறதியினால் நாம் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  ஆகவே இந்த மறதியை வெல்வது எப்படி என்பதை பார்ப்போம்..

1. நீங்கள் முக்கியமாக ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதன் மீது ஆர்வம் காட்டுங்கள்..

உதாரணமாக..பெரிய அவசியமாய் உங்களுக்கு படாவிட்டாலும் மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க அவரின் பிறந்த தேதியை ஞாபகம் வைத்து வாழ்த்துச்சொல்லுங்கள். அலுவலக நிம்மிதம் செய்ய வேண்டிய வேலை என்றால், இதை முதலில் முடித்து காட்டுவோம் என உறுதியெடுத்துக்கொள்ளுங்கள்..அதை ஆர்வமாக செய்யுங்கள்.

2. மறக்க கூடாத விஷயங்களை குறித்து அடிக்கடி வலுக்கட்டாயமாக ஞாபப்படுத்திக்கொள்ளுங்கள். தொடர்ந்து அது சம்பத்தப்பட்ட வார்த்தைகளை உபயோகியுங்கள், கொஞ்ச நாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் தன்னால் ஞாபகத்திற்கு வரும்.

Image result for forgetting

3. நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பதை மனக்கண்ணில் காட்சி படுத்தி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிற்கு செல்லுகையில் இதை வாங்கிக்கொண்டே போகவேண்டும் என்கிற சூழலில் உங்களிடம் உள்ள கர்சீப் முனையில் ஒரு முடிச்சு போட்டு கொள்ளுங்கள். அதை எடுக்கையில், எதற்காக இந்த முடிச்சை போட்டோம் என நினைக்கையில் தன்னால் ஞாபகம் வரும். 

கொஞ்ச நாளில் இந்த பழக்கத்தை நாகரீகம் கருதி கைவிட நினைக்கையில், இதை தவிர்க்க ஏதோ ஒரு வகையில் நீங்களே தேவையானவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுவீர்கள்.

4. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை அதனோடு சம்பத்தபடாத வேறொரு விஷயத்துடன் தொடர்பாக்கி கொள்ளுங்கள்.  

Image result for remembering

குறிப்பாக மாணவர்கள் தாங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சுஸ்தரங்களை  (Formulae) இந்த வகையில் ஞாபகம் வைத்து கொள்ளலாம். 

M / I =k /y = E /r என்றொரு பொறியியல் சுஸ்தரத்தை, அந்த காலத்தில் மாணவர்கள் MAY I KISS YOU ELIZABETH RANI  என்ற கற்பனையான சொற்றொடர் மூலம் ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். ( அந்தந்த வயதுக்கு ஏற்றவகையில் யோசனை செய்துகொள்வதில் தவறில்லை )

5. அதே போல், ஒரு குறிப்பிட்ட தேதியை மற்றொரு சரித்திர நிகழ்வோடு தொடர்புபடுத்தி கொண்டும் ஞாபகம் வைத்து கொள்ளலாம்.

அனைத்திற்கும் மேலே நாம் ஆர்வமாயிருக்கும் விஷயங்கள்தான் பெரும்பாலும்  நம் ஞாபகத்தில் தங்கும் என்பதால்,  நினைவில் கொள்ளவேண்டியவற்றின் மீது ஆர்வம் காட்டுங்கள். 

நினைவாற்றல் தரும் வெற்றியின் அளவு அளப்பரியது என்பதை புரிந்துகொண்டு  இதை செயல்படுத்தி பாருங்கள்.

English Summary

Do you often forget something? - Do this ..!

Latest Articles

KOLNews