KOLNews

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகமாக, உங்களை மக்கள் பார்க்‍க வேண்டுமா..? - விஜய் சேதுபதிக்‍கு பாரதிராஜா கேள்வி

இலங்கையில் உள்ள ராஜபக்ச அரசின் ஆதரவாளராக பார்க்கப்படும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த  "800" திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டுமென, நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Confirmed – Vijay Sethupathi to play Muttiah Muralitharan in  soon-to-be-released biopic

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில், நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாரதிராஜா.

அத்துடன்,  ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... என பாதிக்கப்பட்ட மக்கள் தன்னிடம் கேட்பதாகவும், இனத்துரோகம் செய்த ஒருவரின் முகமாக, காலத்திற்கும் உங்கள் முகத்தை மக்கள் பார்க்‍க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திலீபனின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தால், இலவசமாக பணியாற்ற காத்திருப்பதாகவும்,.பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

English Summary

Do you want people to see you as the face of a racist? - Bharathiraja question to Vijay Sethupathi

Latest Articles

KOLNews