KOLNews

குழந்தை விரல் சூப்புகிறதா..?

குழந்தையின் முதல் ஆண்டில் அது தன் கையில் இடைக்கும் எல்லா பொருட்களையும் வாயில் போட்டுக்கொள்ளும்.  பாதுகாப்பு கருதி, அதை நாம் கட்டுப்படுத்துகையில் விரல் சூப்புதலையும் அல்லது இது போன்ற பழக்கங்களையும் அது செய்ய முற்படுகிறது. பொதுவாக  குழந்தைகள் அயர்ச்சியடையும் பொழுதும், பசி அடையும் பொழுதும், சலிப்படையும் பொழுதும் வெறுப்படையும் பொழுதும் விரல் சூப்பும்.

Baby Cues - How To Identify 4 Important Cues | BellyBelly

ஆகவே அவை சலிப்படையாத வகையில் உங்கள் செயல்பாட்டை உண்டாக்குங்கள். குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் சுறுசுறுப்பாக ஈடுபடும் சிறிய விளையாட்டுகளை அதனுடன்  விளையாடுங்கள். 

விரல் சூப்புவது கொஞ்ச காலம் மட்டும்தான் என்றால் ஒன்றும் செய்ய வேண்டாம். குழந்தைகளின் விரல்களுக்கு உறை போட்டோ அல்லது நெடி அடிக்கக் கூடியவைகளைப் பூசியோ, அல்லது விரலைச்சுற்றி ஒரு துணியைச் சுற்றியோ வைக்காதீர்கள். இதனால் குழந்தை நாக்கை சப்புக் கொட்டுதல், தன்னுடைய தலையிலிருந்து மயிரை பிய்த்தல் போன்ற வழக்கங்களை மேற்கொள்ளும். இடைவிடாமல் விரலை சப்பினால் ஒழிய, விரல் சூப்புதல் குழந்தையின் பற்களை கெடுப்பது இல்லை

This really sucks! Treatment for non-nutritive sucking in pediatric dental  patients | DentistryIQ

ஆனால் தொடரும் பட்சத்தில், முன் பற்கள் நீண்டு விடும் அபாயம் உண்டு.  நிலையான பற்களின் ஒழுங்கு விறல் சூப்புவதால் கெடுவது இல்லை ஏனெனில் நிலையான பற்கள் முற்றிலும் புதிய வரிசையில் முளைக்கின்றன. சில சமயங்களில் குழந்தைகள், குறிப்பாக முதிராத குழந்தைகள், குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியிலும் விரலைச் சூப்பும் பழக்கத்தை கொண்டு செல்லுகின்றன. இதுவே பிறகு நகத்தைக் கடிப்பது, பென்சிலையும் ரப்பரையும் மெல்லுவது, அதிகமாக சாப்பிடுவது போன்றவைகளாக உருவெடுக்கின்றன.

எப்போதும் விறல் சூப்பும்  குழந்தைகளுக்கு (Pacifier) சூப்பான் என்னும் அமைதிப்படுத்தும் கருவியை கொடுக்கிறார்கள். அவைகள் பல மணி நேரம் அந்தக் கருவியை சூப்புகின்றன. அதில் மன அமைதி பெறுவது போல் காணப்படுகின்றன. இருப்பினும், ஒரு பொருள் மீது சார்தலை உண்டாக்குவதால் சரியல்ல.  அந்தக் கருவிகள் கெடுதல் என்ற கருத்தும் பல மருத்துவர்களிடம் உண்டு.  குழந்தைக்கு பசி உண்டாகும் போது கொடுக்க வேண்டிய உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் எப்பொழுதும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சூப்பானைக் கொடுக்கக் கூடாது.

 

English Summary

Does the baby lick the finger ..?

Latest Articles

KOLNews