சில சமயங்களில் குழந்தை பசியோடு இருந்தாலும் பால் குடிக்க மறுக்கும். இது பெரும்பாலும் நிப்பில், மற்றும் பால் பொருட்களால் அடைபட்டு, குழந்தை உறிஞ்சும் போது கூட பால் வராது. அதே போல பால் அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ அல்லது அவனுக்குப் பிடித்தமானதாக இல்லையானாலும் குழந்தை பால் குடிக்க மறுக்கும். குழந்தைக்கு பால் பிராண்டும் சர்க்கரையின் அளவும் நன்றாக தெரியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அத்துடன், பாட்டிலின் உள்ளே காற்று இல்லாமல் போய் அவனால் உறிஞ்சி குடிக்க முடியாமல் போனாலும் சில சமயங்களில் குழந்தை பால் குடிக்க மறுக்கும். இது பெரும்பாலும் நிப்பில் மிகவும் மிருதுவாக இருந்தால் ஏற்படும். நிப்பில் மாதத்திற்கு குறைந்தது ஒரு தடவையாவது கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.

பாலூட்டும் முன்னர் பாட்டிலில் உள்ள பாலின் சூட்டை தெரிந்து கொள்ள,ஒரு சொட்டு பாலை உங்கள் மணிக்கட்டில் விட்டுப்பாருங்கள். பால் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். பாட்டிலை பாலூட்டும் போதும் பால் நிறைந்து இருக்கும்படி சாய்த்து பிடிக்கவும். உள்ளே காற்று குறைவாக இருப்பின் பாட்டிலின் மேல் பகுதியை மேலே தூக்கி பாட்டிலின் உள்ளே காற்று புகுமாறு செய்து காற்று அழுத்தக் குறைவை சரி செய்யவும்.
பாட்டிலினால் பாலூட்டும் பெற்றோர்கள் ,தங்கள் குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவன் சாப்பிடும் பாலின் அளவில் கண்டிப்பாக இராதீர்கள். குழந்தைகள் பலவிதம். அவர்களுக்கு உணவும் பல அளவுகளில் தேவை. உங்கள் குழந்தைக்கு அவன் எவ்வளவு விரும்புகிறானோ அவ்வளவு குடுங்கள். அவன் ஒரு பாட்டில் பாலை குடித்து விட்டு, அதற்கு மேலும் இருந்தால் அதை அவனுக்குக் கொடுங்கள். பாட்டிலில் பால் மீதி உள்ள போது பால் குடிப்பதை நிறுத்தி விட்டால், மீதி பாலை கட்டாயப்படுத்தி குடிக்க செய்யாதீர்கள். உங்கள் எண்ணத்திற்கு எதிராக இந்த விஷயத்தில் அவன் முடிவை சிறந்தது.

பாட்டிலில் பால் ஊட்டுவது சுமார் ஒரு ஆண்டு காலம் நீடிக்கலாம். 3 - 4 மாதங்களில் இருந்து ஸ்பூனை பயன்படுத்தி சிறு சிறு அளவுகளில் ஜூஸ் சூப் முதலியவற்றை கொடுங்கள். சிறுக சிறுக பாட்டிலின் உபயோகத்தை குறைத்து, அவனை டம்ளரில் குடிக்க பழகுங்கள்.
English Summary
Does the baby refuse to drink milk ..?