KOLNews

கனவு, பகற்கனவு ! - வித்தியாசம் என்ன..?

கனவிற்கும் பகற்கனவிற்கும் பொதுவானவை பல இருக்கின்றன . இவை இரண்டும் கனவு காண்பவனையே நடுநிலையாகக் கொண்டிருப்பவை .  மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகள் நிறைவேறுவதையே முக்கியமாக இரண்டிலும் காண்கிறோம் . சில ஆசைகளும் எண்ணங்களும் இழிந்தவைகளாக இருக்கலாம் .

அவற்றை மனிதன் அறிவினால் அடக்க முயலுகிறான் . அனால் அவை அடிமனத்தில் அழுந்துகின்றன . உறங்குகின்ற போது அறிவின் ஆதிக்கம் சற்றுத்தளர்கின்றது . அந்த வேளையிலே அவைகள் கனவாக வெளியாகின்றன . 

அதுபோலவே பகற்கனவிலும் அவ்வாசைகள் தோன்றி ஒருவகையான மனநிறைவை அளிக்கின்றன .பகற் கனவைப்பற்றி ஆய்வு செய்த ஜீ . எச் . கிரீன் எனும் ஆராய்ச்சியாளர் பின்வருமாறு எழுதியுள்ளார் - 

நமக்குத் தெரியாமல் மனத்திலே அழுந்தி மறைந்து கிடக்கும் ஆசைகளை பகற்கனவு நிறைவேற்றுகின்றது .ஒருவன் தன்னைப் பற்றியே உயர்வாகக் கருதுவதை அது குறிக்கின்றது . உலகத்தைப் பற்றி அவன் வெளிப்படையாகக் கொண்டுள்ள நினைப்பைத் தவிர வேறொரு நினைப்பிருப்பதையும் அது குறிப்பாகக்காட்டுகிறது . 4.செயலில் வேண்டுமென எழுகின்ற எண்ணத்திற்கும் , செயலில் இறங்குவதற்கும் இடையே உண்டாகும் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் . மிக நல்ல முயற்சியோடு திடமாகச் செயலில் ஈடுபட்டிருக்கும் நேரங்களில் அல்லாமல், வேறு சமயங்களில் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது .

English Summary

Dream, daydream! - What is the difference ..?

Latest Articles

KOLNews