KOLNews

பாகற்காய் வத்தல்..! - தயாரிப்பது எப்படி.?

பாகற்காய் வத்தல்..!  

சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் மற்றும் தயிர் சாதம் என அனைத்துக்கும் பொருத்தமான ஒரு வத்தல் பாகற்காய் வத்தல். பாகற்காயின் கசப்பு சுவை பிடிக்காதவர்கள் கூட அது வத்தல் ஆக இருந்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆக அனைத்துக்குமான தொடுகறியாக பாகற்காய் வத்தலை எடுத்துக்கொள்ளலாம்.

அதனை தயாரிப்பது எப்படி என பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:

பாகற்காய் - 4 , தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த்துள், புளி தண்ணீர் 1 கப்.

செய்முறை:

பாகற்காயை வட்டமாக நறுக்கி, புளித் தண்ணீரில் வேகவைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேகவிடவும். தண்ணீரை வடிகட்டி பாகற்காயை வெயிலில் காயவைத்து எடுக்கவும்,

குழம்பில் வறுத்து சேர்க்கலாம். சாதாரணமாகவும் வறுத்து சாப்பிடலாம்.

 

 

English Summary

Dry Bitter gourd..! - How to prepare.?

Latest Articles

KOLNews