KOLNews

சுலபமாக செய்யலாம்..சுண்டைக்காய் வற்றல்..!

காய்கறிகள் கிடைப்பதில் கூட சிக்கல் உருவாக கூடிய கொரோனா காலகட்டத்தில், மிக எளிதான தொடுகறி சுண்டைக்காய் வற்றல். தற்போது வெயில் காலமாக இருப்பதால் . இதனை இந்த காலகட்டத்தில் தயாரித்து  இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

இதனை தயாரிக்க தேவையான பொருள்கள்:

பச்சை சுண்டைக்காய் - அரை கிலோ, மோர் - ஒரு லிட்டர்,  காய்ந்த மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன், 

செய்முறை:

பச்சை சுண்டைக்காயை அலசி கத்தியால் லேசாக கீறிக்கொண்டு, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வைத்து, பிறகு நீரை வடிக்கவும். மோரில் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, சுண்டைக்காயைப் போட்டு ஊறவிடவும். 

அடுத்த நாள் மோரிலிருந்து காயைக் கரண்டியால் வடித்தெடுத்து வெயிலில் காயவிடவும். மோரைக் கீழே ஊற்றி விடக்கூடாது. தனியே எடுத்து வைக்கவும். மாலையில் திரும்பவும் காயை மோருக்குள் போட்டுக் கலக்கி மூடி வைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே மாதிரி 3 நாட்கள் செய்ய வேண்டும். வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து, எடுத்துப் பத்திரப்படுத்தவும். வற்றல் குழம்பு

செய்ய இதை வதக்கிப் பயன்படுத்தலாம். இந்த வற்றலை வறுத்து மிக்ஸியில் பொடித்து, சூடான சாதத்தில் சேர்த்து, எண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

 

 

 

English Summary

Easy to make .. Sundakai Vathal ..!

Latest Articles

KOLNews