KOLNews

வெள்ளரிக்காய் சாப்பிடுங்க..! மெடிக்கல் செலவை மிச்சப்படுத்துங்க..!

பலர் வெயில் காலத்திற்கு தாகத்தை அடக்கும் தர்பூஸ், கிர்னி போன்றவைகளுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து நினைப்பார்கள். ஆனால் அதன் பயன் அதை விட அதிகமானது.

வெள்ளரிக்காயைத் தினமும் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும் . அதே போல, வெள்ளரி விதையை தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் . வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் அடைப்பு , சதை அடைப்பு , சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும் . 

What Are Bladder Stones? - YouTube

மணமான ஆண்கள், வெள்ளரி வேர்ப் பட்டையை அரைத்து ஆண் குறியில் பூசிக்கொண்டால் , நரம்புத் தளர்ச்சி நீங்கி உடலுறவு நீடிக்கும் . 

மேலும், வெள்ளரிப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் குடித்தால் வாய்ப் புண் , தொண்டைப் புண் ஆறும் . வெள்ளரிப் பழத்துடன் , நாட்டு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும் . இளைத்த உடல் பெருக்கும் . வெள்ளரி , முள்ளங்கி , வாழைத்தண்டு - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாறு எடுத்துக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் . நீர் அடைப்பு , நீர்க் கட்டு போன்றவையும் விலகும் வெள்ளரி , வெள்ளை வெங்காயம் - இரண்டையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து குடித்துவந்தால் உடல் பருமன் , ஊளைச் சதை குறையும் . வெள்ளரி இலையை சீரகம் சேர்த்து வறுத்துப் பொடி செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் தொண்டை நோய்கள் விலகும் .

Prescription Weight-loss Medicines - familydoctor.org

அதே போல 100 கிராம் வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் எவ்வளவு தெரியுமா..?

நீர் 96.4 கிராம் , புரதம்  0.4 கிராம், கொழுப்பு  0.1 கிராம்,  மாவுச்சத்து 2.8 கிராம் கண்ணாம்பு 0.01 கிராம் பாஸ்பரஸ் 0.01 கிராம், இரும்பு 1.5 மில்லி கிராம்,  ஏ வைட்டமின் 0 மைக்ரோ கிராம்,  பி I டவைட்டமின் 0.01 மில்லி கிராம்,  நிக்கோட்டினிக் அமிலம் 0.2 மில்லி கிராம், பி 2 வைட்டமின் 0.01 கிராம், சி வைட்டமின் 7 மில்லி கிராம்,  நார்0.4 மில்லி கிராம், 

ஆக 100 கிராம் வெள்ளரிக்காய் தரும் சத்து : 14 கலோரிகள் 17 மில்லி கிராம் 

English Summary

Eat cucumber ..! Save on medical expenses ..!

Latest Articles

KOLNews