உலகெங்கும் சென்று தமிழர்கள் புகழ்கொடி நாட்டி வருவது என்பது காலம்காலமாக நடந்து வருவதுதான். அந்த வகையில், சென்னையை சேர்ந்த ராஜ் ஐய்யர் எனும் தமிழர் அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டி.யில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1992 வரை திருச்சி ஆர்.இ.சி { தற்போது என்.ஐ .டி என்ற பெயரில் உள்ளது) யில் எலக்டிரிக்கல் அண்ட் எலக்டிரானிக்ஸ் பிரிவில் (இ.இ.இ.) பி.டெக் படித்து உள்ளார். பின்,பெங்களூருவில் பணியாற்றியதுடன், மின் பொறியியல் துறையில் ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டமும் பெற்று ள்ளார். அதன் பின் அமெரிக்கா சென்ற அவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவரை தற்போது அமெரிக்க அரசு அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக நியமித்து உள்ளது. திருச்சி என்.ஐ.டி. முன்னாள் மாணவர் ஒருவர் இப்படி பட்ட பெரும் பொறுப்பில் இடம்பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. ராஜ் அய்யரின் மனைவி பிருந்தாவும் அமெரிக்க அரசில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் உயர் அதிகாரியாக செயலாற்றி வருகிறார் என்பதும் மற்றொரு சிறப்பு.
English Summary
Educated in Trichy, he was appointed as the Chief Information Officer of the US Army ..!