KOLNews

திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் திடீர் மரணம்..!

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த், இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 54.

கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கே.வி.ஆனந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

மலையாளத்தில், மோகன்லால் நடித்த ‛தேன்மாவின் கொம்பத்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கே.வி.ஆனந்த் நேருக்குநேர்,தமிழில் முதல் முதலாக காதல் தேசம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், தொடர்ந்து  பாய்ஸ், முதல்வன்', செல்லமே, சிவாஜி, போன்ற படங்களில் தன சிறப்பான ஒளிப்பதிவால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர்.

இப்படி, பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  ஆதன் பின் ‛அயன்', கோ, ‛மாற்றான்', ‛அனேகன்', ‛கவன்', ‛காப்பான்' போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

கடந்த 1995 ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமான தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

English Summary

Film director K.V. Anand dies suddenly ..!

Latest Articles

KOLNews