KOLNews

சென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..!

கொரோனா பொதுமுடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு, இந்த ஆயுத பூஜை விடுமுறை ஒரு லேசான ஆறுதலை தந்துள்ளது. இரண்டு நாட்கள் ஊரில் கழிக்க சென்னையிலிருந்து பலர் தென்மாவட்டங்களுக்கு பயணித்துள்ளனர். 

இந்நிலையில், அவர்கள் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பி,  தங்கள் பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக அக்டோபர் 27ம் தேதி காலை 5-30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க கால தளர்வுகளின் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில்கள் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி வெள்ளி அக்டோபர் 23 அக்டோபர் 24 ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டது 

அதேபோல் விடுமுறை முடிந்ததும் திரும்பி வரும் பயணிகள் வசதிக்காக காலை 7 மணி முதல் இயக்கப்படும். மெட்ரோ ரயில் அக்டோபர் 27ஆம் தேதி காலை 5-30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

English Summary

For the convenience of those returning to Chennai, the Metro train will run from 5:30 am

Latest Articles

KOLNews