KOLNews

வனப்பகுதி ஆக்ரமிப்பு..! - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் , மலைப்பகுதியில் சட்ட விதிகளை மீறி , ரிசார்ட் கட்டுவதன் மூலம் , பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், அங்குள்ள சுற்று சூழல் பாதிக்கப்படுவதாக, குறிப்பாக மரங்கள், பறவைகள், மற்றும் நீரோடையோகள் பாதிக்கப்படுவதாக சுட்டி காட்டி, வனப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என . கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிய பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது , நீதிபதிகள்,  தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது . நீலகிரி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட வனசரக அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து , ஆக்கிரமக்கப்பட்ட வளப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் .என்று தெரிவித்ததோடு,  இதுகுறித்து வனத்துறை  அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் . வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டனர்  அத்துடன் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .

English Summary

Forest aggression ..! - Chennai High Court important order to the Government of Tamil Nadu.

Latest Articles

KOLNews