KOLNews

இன்று முதல்..! 50 சதவீத இருக்‍கைகளுடன் டாஸ்மாக்‍ பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதி..!

தமிழகத்தில் டாஸ்மாக்‍ பார்களை இன்று முதல் திறக்‍கலாம் என்றும், 50 சதவீத இருக்‍கைகள் மட்டுமே அனுமதிக்‍க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று டாஸ்மாக்‍ மேலாண் இயக்‍குநர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழகம் முழுவதும் நோய்க்‍கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டாஸ்மாக்‍ பார்களை செவ்வாய்க்‍கிழமை முதல் திறக்‍க அனுமதியளிப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன், பார் ஊழியர்களுக்‍கும், பார்களுக்‍கு வரும் வாடிக்‍கையாளர்களுக்‍கும் பல்வேறு நிபந்தனைகளையும் டாஸ்மாக்‍ விதித்துள்ளது. 

குறிப்பாக, காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் சோதனை, சானிடைசரை தானியங்கி இயந்திரத்தில் பெறும் வகையில் அமைக்‍க வேண்டும், நோய்த்தொற்று இல்லாதவர்களையே அனுமதிக்‍க வேண்டும்,பணியாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகளை அணிய வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி தூர சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்,பார்களுக்‍கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டும்,  போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

English Summary

from today..! Government of Tamil Nadu allows Tasmac bars to open with 50% seats ..!

Latest Articles

KOLNews