KOLNews

ஒத்துழைப்பு கொடுங்கள்..! - மக்களை வலியுறுத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

இன்று,  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசுகையில், 

முன் எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையிலும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாகக் கூறினார். அத்துடன், கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர். தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி இளைஞருடன் தொடர்பில் இருந்த 163 பேர் தனிமைப்படுப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதே போல அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்த 94 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கோரானவை எதிர்கொள்ள மக்களுக்கு தேவையான முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவற்றை  அதிக விலைக்கு விற்பனை செய்த 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர், அது போன்ற புகார்கள் மீது அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

English Summary

Give cooperation ..! - Minister Vijayabaskar to urge the people ..!

Latest Articles

KOLNews