KOLNews

மந்தமான பொருளாதாரத்திலும் மங்காத தங்கம்..! ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..!

ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி, பலரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

சென்னையில்,  ஆபரண தங்கம் இன்று பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.30,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பொதுவாக தங்கத்தின் விலையானது,சர்வதேச பொருளாதாரம்,, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்நிலையில், ஒரு சில நாட்களை தவிர பெரும்பாலும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த ஆபரண தங்கத்தின் விலை ஆகஸ்ட் 2-ஆம் தேதி பவுனுக்கு ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. 

அதன் பின், ஆகஸ்ட் 7-ஆம் தேதி  விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. பிறகு மேலும் விலை உயர்ந்து 13-ஆம் தேதி ரூ.29 ஆயிரத்தைத் தொட்டது. 

இவ்வாறு தங்கம் விலை, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.29,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது.

இந்நிலையில், தற்போது சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. இன்று பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.30,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,765-க்கு விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.  

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 2.60 பைசா உயர்ந்து 55.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.55,200 ஆகவும் இருந்தது. 

இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுதான் என இத்துறை வல்லுநர்களால் சொல்லப்படுகிறது . 

தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட சரிவு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு  போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். 

English Summary

Gold in New peak despite of dull economy

Latest Articles

KOLNews