KOLNews

ஒரே நாளில் ..தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரத்தின் விலை கிட்டத்தட்ட 43 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பிறகு சற்று விலை குறைந்தது.  இருப்பினும் இரண்டு வார காலமாக ஏற்றம் இறக்கம் ஆகவே இருந்து வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமையான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ஆயிரத்து 464 குறைந்து ரூபாய் 37,440 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூபாய் 183 குறைந்து ரூபாய் 4680 விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூபாய் .40 காசுகள் குறைந்து ரூ 65.40 ஆகவும், , கட்டி வெள்ளி கிலோவிற்கு ரூபாய் 400 குறைந்து ரூபாய் 65 400 ஆகவும் உள்ளது  தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கம் விலை சட்டென்று இறங்கியது பொதுமக்களிடையே தங்கம் வாங்குவதற்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 

 

English Summary

Gold prices fall sharply in one day

Latest Articles

KOLNews