KOLNews

புதிய உச்சத்தை தோட்ட தங்கம்..! - ரூ.29 ஆயிரத்தை தாண்டி ஏறுமுகம்..!

கடந்த ஜுலை மாதம் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.26528 ஆக இருந்த நிலையில் ஆகஸ்டு 13ஆம் தேதியான நேற்று  ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக, சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

 ஆகஸ்ட் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மொத்தம் 13 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது . இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.40  உயர்ந்து ரூ.49 - ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.

பொருளாதார மந்தம், உற்பத்தி குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு போன்றவற்றை கருத்தில் கொண்டு ரியல் எஸ்டேட் , வங்கி திட்டங்களில் முதலீடு செய்வோரை, தங்கம் தன் பக்கம் திரும்பி பார்கவைத்துள்ளது.,  தற்போது, ரஷியா, ஹாங்காங், ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவை தங்களிடம் உள்ள டாலர்களை விற்று, தங்கத்தை வாங்கும் நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலை தொடரும் பட்சத்தில் தங்கம் விலை விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்பதில் சந்தேகமில்லை என சந்தையில் பேச்சு அடிபடுகிறது.

English Summary

Gold rate touches new hieght ... - Crossing Rs.29 thousand

Latest Articles

KOLNews