KOLNews

நெல்லிக்காய் சாலட் ..! - இப்ப சாப்பிடுங்க ..!

தற்போது கொரானா நோய் தொற்றின் பரவலை தடுக்க, மக்கள் அனைவரையும் சுத்தமாக , சுகாதாரமாக இருக்க சொல்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் நெல்லிக்காய் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதனை  சாலட் வகையாக செய்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காய் சாலட் 

தேவையான பொருட்கள் - 

பெரிய நெல்லிக்காய் - 20 

தயிர் இரண்டு                - 2 கப் 

இஞ்சி                                - 1 துண்டு 

பச்சை மிளகாய்             - 5 

இந்து உப்பு                       - தேவைக்கேற்ப 

கறிவேப்பிலை                 -  சிறிதளவு 

வெங்காயம்                       - பாதி

 செய்முறை - 

 இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். நெல்லிக்காய் வேகவைத்து , அதன் விதை கொட்டையை நீக்கி, இஞ்சியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

8 Amazing Benefits Of Amla Juice: When Bitter Is Better - NDTV Food

இவற்றுடன் தயிர், இந்துப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.  நெல்லிக்காய் சாலட் தயார்.

பயன்கள் - 

கண்பார்வை குறைபாடுகளை களைய உதவும் , இதயநோய் மூல நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும், அதிக எடையை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

English Summary

Gooseberry salad ..! - Eat it now!

Latest Articles

KOLNews