KOLNews

15 மருத்துவப் பொருள்களின் உச்சபட்ச விலையை நிர்ணயித்தது தமிழக அரசு..!

கொரோனா காலகட்டத்தில் பலரின் வருமானமும் சிக்கலில் உள்ள நிலையில், கொரோனாவை தடுக்கும் பாதுகாப்பு கருவிகளான முக கவசம் மற்றும் சானிடைசர்களின் விலை கூடுதலான விலைக்கு விற்கப்படும் சூழல் உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு, மாஸ்க் , சானிடைசர் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கான விலையை தமிழக அரசு இன்று நிர்ணயித்துள்ளது.  அத்துடன், இந்த 15 மருத்துவப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு பட்டியலிட்டு அதற்கான உச்சபட்ச விலையையும் அறிவித்துள்ளது . 

அதன்படி,  என் -95 முகக் கவசத்தை ரூ.22 - க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் . 3 வெவ்வேறு சர்ஜிகல் முகக் கவசங்களை முறையே ரூ .3 , ரூ .4 , ரூ .4.50 - க்கு விற்க வேண்டும் . அதே போல, 200 மில்லி சானிடைசர் ரூ . 110 - க்கு விற்பனை செய்ய வேண்டும் . மேலும், பிபிஇ உடை ( 1 யூனிட் ) - ரூ . 273 , பல்ஸ் ஆக்சிமீட்டர் ரூ . 1,500 , ஆக்சிஜன் முகக் கவசம் ( 1 யூனிட் ) - ரூ . 54 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English Summary

Government of Tamil Nadu has fixed the maximum price of 15 medical items ..!

Latest Articles

KOLNews