KOLNews

மாணவர்களை மதமாற்ற முயற்சித்த அரசு ஆசிரியைகள் இடைநீக்கம் ..! - ஆதாரத்துடன் சிக்கினர்.

தங்களிடம் பயிலும் மாணவ மாணவியர்காளை  கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக  அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் இருவரை ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள  செல்லாத்தா பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையான அருள்மணி (வயது 42)  ஆசிரியையான சரண்யா (வயது 37) பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பள்ளியில் பயிலும் ஏழை இந்து மாணவ-மாணவியர்களை மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வினர் புகார் அளித்தனர். 

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டார கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்ட போது இரு ஆசிரியைகளின் அறை மற்றும் அவர்கள் மேஜை மீது இருந்த கிறிஸ்தவ மதப் போஸ்டர், மற்றும் புத்தகங்கள் இறந்தன. அதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, உதவி தலைமை ஆசிரியை அருள்மணி ஆசிரியை சரண்யா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

English Summary

Government teachers suspended for trying to convert students - Stuck with evidence.

Latest Articles

KOLNews