KOLNews

தலைமுடி வளர ..தரமான யோசனைகள்..!

ஒருவரின் அழகுக்கு பிரதானமாய் இருப்பது தலை முடி, அதை நீக்கினால், உலக பேரழகனுக்கும் கொஞ்சம் வருத்தம் வரும். அது வெறும் அழகோடு சம்பத்தப்பட்டதோடில்லாமல், முடி அற்றவர்களில் சிலருக்கு அது தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கிவிடும். 

ஆக, அந்த முடியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் ?. இதோ சில எளிய வழிகள்.. 

1. குமட்டிக்காய் சோற்றில் உப்பை கரைத்து தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் அந்த இடத்தில் முடி வளரும்

2. கருவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக வளரும்

3. நிலஆவாரை பூ, ஆவாரம் பூ, சரக்கொன்றை பூ, பொன்னாவரை பூ, செம்பருத்திப் பூ ,சுருள் பட்டை தலா 50 கிராம் எடுத்து, பீட்ரூட் சாற்றில் அரை லிட்டர் எடுத்து, இரண்டு நாள் ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்,  இளநரை மறையும் முடி நன்றாக செழித்து வளரும்.

English Summary

Hair Growth .. Quality Ideas ..!

Latest Articles

KOLNews