நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்க போவதில்லை என்ன அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான முருகேசன் (வயது 55) என்பவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார்.

அப்போது அங்கிருந்த போலீசார் ஓடிவந்து முருகேசனை தடுத்து நிறுத்தியதுடன், 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்கள் அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து போயஸ் இல்லம் நோக்கி திரண்டு வருவது தொடர்வதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Heavy security around actor Rajinikanth's house ..!