KOLNews

இனி.. உணவு பறந்து வரும் ! - ட்ரோன் மூலம் டோர் டெலிவரி !

ஆன்லைன் மூலம் உணவுவை தருவித்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, சோமாடோ மற்றும் டன்ஸோ நிறுவனங்கள், ட்ரோன் மூலம் விநியோக சேவையை துவங்க உள்ளன. தற்போது அதற்கான சோதனை முயற்சிகளை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக, மேலாண்மை ஆலோசனை நிறுவனமான அல்டர்நேட்டிவ்  குளோபல் இந்தியா (ஏஜிஐ) வை ஜொமாடோ மற்றும் டன்சோ தங்களது ஆலோசனை பங்காளராக ஆக்கியுள்ளன. ஏஜிஐ இந்தியாவில் ஒரு முன்னணி ஈ.வி & ட்ரோன் ஆலோசனை நிறுவனமாகும், இது மின்சார வாகனங்கள் (ஈ.வி) மற்றும் ட்ரோன்கள் போன்ற உயர் வளர்ச்சித் தொழில்துறைகளில் கவனம் செலுத்துகிறது.

Swiggy, Zomato, Dunzo Get Permits To Test Drone Delivery | Curly Tales

உணவு சேவையை செய்யும்  சோமாடோ தனது சோதனையை ராஜஸ்தானின் உள்ள ஆல்வாரில் நடத்த, டன்சோ பெங்களூரின் புறநகரில் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த புதுமையான சேவைக்கு தங்கள் தயார்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த  இரு நிறுவனங்களுக்கும் 100 மணிநேர சோதனைகளுக்கு  திட்டமிட்டுள்ளன.

சோமாடோ  உணவு மற்றும் மருந்து விநியோகத்தை இதன் மூலம் செய்ய நினைக்கையில்,டன்சோ பி 2 சி மற்றும் பி 2 பி மாடல்களில் உணவு, மருந்து மற்றும் தொகுப்பு விநியோகத்தில் கவனம் செலுத்த உள்ளது.

This Is The Perfect Time For Zomato, Swiggy and Dunzo To Take Their Drones  Out In India

அதே போல டன்ஸோவைப் பொறுத்தவரை, ட்ரோன் டெலிவரி சேவைகள் தங்களது ஒரு மையத்திலிருந்து இன்னொரு மையத்திற்கு இடையிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் என தெரிகிறது.

இந்த சேவையை ஆகாயம் மார்க்கமாக செய்வதால், சிவில் விமான துறையின் முறையான ஒப்புதல்களிலும் , பாதுகாப்பு விதிமுறைகளிலும் இந்நிறுவனங்கள் அதிக கவனத்தை  செலுத்திவருகின்றன.

English Summary

Here after.. food will fly! - Door Delivery by Drone!

Latest Articles

KOLNews