KOLNews

உயிர் எப்படி பிரியும்...தெரியுமா..?

காலகாலமாக பிறப்பும் இறப்பும் நிகழ்ந்தாலும், பிறப்பு குறித்து தெரிந்த நம்மில் பலருக்கு, இறப்பு குறித்து பல சந்தேகங்கள் உள்ளன.

அவற்றை போக்கும் விதமாகத்தான் கருட புராணத்தில், கருடனுக்கு பெருமாள் விளக்குக்கிறார்.

Image result for how life get away from human body garuda puranam

கருடன் பெருமாளை நோக்கி ஸ்ரீ ஹரியே.. அடியார்க்கு எளியவரே..!   மனிதன் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது..? இதை திருவாய் மலர்ந்த வேண்டும் என்று கேட்க பகவான் கூறலானார் 

கருடா,  உயிரானது மனிதனை தனது சரீரத்தை விட்டு விலகும் போது கண் வழியாகவோ  நாசி வழியாகவோ  ரோம கால்களில் உள்ள துவாரம் வழியாக நீங்கிவிடும். ஞானிகளுக்கு கபாலம் விரிந்து நீங்கும். பாபிகளுக்கு அபான மார்க்கமாக உயிர் நீங்கிம்.  உயிர் நீங்கிய பின் மனித உடல் கட்டை போல கிடக்கும்.

Image result for deAD of a saint

 பிறகு அந்த உயிரற்ற உடல் மரக்கட்டை போன்ற அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல் பஞ்ச பூதத்தால் உருவானவை,  ஆகையால் பிரிதிவி மண்ணிலும்,  அப்பு புனலிலும், தேயு அக்கினியிலும்,  வாயு காற்றிலும், ஆகாயம் ஆகாயத்திலும் லயம் ஆகிவிடும் .

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறும்,  கர்மேந்திரியம் ஐந்தும்,  ஞானேந்திரியம் ஐந்தும்,  மனித சரீரத்தில் திருடர்கள் போல பதுங்கி ஒளிந்து ஒன்றோடொன்று இணைந்து இருப்பன.

 உயிரானது நீங்கும் போது அவை அனைத்தும் மனதோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கருமத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டி குடியேறும். அதைப்போலவே, புண்ணியம் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்ய தேகத்தில் அவன் குடியேறுவான்.  மல முத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும், ஊணும் ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசுக்கப்பட்டு எரிக்கப்பட்டு நாசமடைந்து விடுவதே மனித உடலாகும். 

மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தையும் சொல்கிறேன் கேட்பாயாக..

Image result for re birth

பல நரம்புகளோடு தூணை போல் ஒரு பெரிய நரம்பை கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும், காம குரோத லோப மோக மத மாத்சர்யம் ஆகியவற்றால் கூடியதும்,  காம குரோத, இச்சை துவேஷங்களால் வியாபிக்க பெற்றதும், மாயையோடு கூடியதுமான தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாக உள்ளதாகும். சமஸ்தலோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும்  தேகத்திலேயே இருக்கிறார்கள்..!' என்று கூறியருளினார் பகவான்.

English Summary

How life get away..?

Latest Articles

KOLNews