KOLNews

திரையரங்குகளில், தற்காலிகமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி..! - மதுரை ஐகோர்ட்டு

கொரோனா கால பொதுமுடக்கத்தின் போது மூடப்பட்ட தியேட்டர்கள், நீண்ட இடைவெளிக்கு பின் வந்த தளர்வுகளின் இறுதி கட்டத்திலேயே திறக்க அனுமதிக்கப்பட்டது. அதையடுத்து 50 சத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற கட்டுப்பாட்டுடன் இயங்கி வந்த தியேட்டர்களில், திரைத்துறையினரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் வகையில்  100 சதவீத இருகைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.  

ஆனால், அதனை எதிர்த்து, மதுரை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.முத்துகுமார், திருச்செந்தூரை சேர்ந்த வகீல் ராம்குமார் ஆதித்தன், மதுரையை சேர்ந்த போனிபேஸ் ஆகியோரும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுதாகல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழகுகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வகீல்களும்  மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மற்றும்  தியேட்டர்கள் உரிமையாளர் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், 

தங்களது விசாரணையின்  முடிவில், “கொரோனா காலத்தில் தியேட்டர் உரிமையாளர்களின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களுக்கு முகியத்துவம் அளிக்க முடியாது” என்று கூறி  வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். அத்துடன், இடைப்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருகைகளுடன் செயல்படலாம் என்று அனுமதித்த நீதிபதிகள்,, தியேட்டர்களில் காட்சிகளை அதிகரிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிகும்படியும் உத்தரவிட்டனர்.

English Summary

In theaters, only 50 per cent seats are allowed temporarily ..! - Madurai High Court

Latest Articles

KOLNews