KOLNews

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை..! - பின்னணி தகவல்கள்

'பிகில்'பட வருமானம் குறித்த விசாரணைக்காக நடிகர் விஜய் , நேற்று அவரது அடுத்த படமான 'மாஸ்ட்டர் படபிடிப்பு தளத்திலிருந்து வருமானவரித்துறையினளாரால்  அழைத்து செல்லப்பட்டார்.

ஜாகுவார் காரில் வந்த விஜயை, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது இன்னோவோ காரில் இரண்டு அதிகாரிகளுக்கு மத்தியில் உட்காரவைத்து அழைத்து சென்றனர். 

இந்நிலையில், நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக விஜய் ரசிகர்கள் பிகில் பட வசூல் 300 கோடியை தொட்டதாக பதிவிட, தயாரிப்பாளர் கல்பாடியும் தனது பதிவில் சென்ற வருடம் வெளியான படங்களில் 'பிகில்' படம் அதிகளவில் வசூலித்ததாக பதிவிட,  வருமானி வரி துறையினர் சுதாரித்தனர். ஏன் எனில் பிகில் படத்தை மதுரை பகுதியில் விநியோகிஸ்த அன்பு செழியன் காட்டிய கணக்குக்கும் , வசூல் குறித்த தயாரிப்பாளரின் பதிவும் ஒத்துப்போகாததாய் உணர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு புறம், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில்,  இந்த கணக்கும் குழப்ப களத்தில் இறங்கிய வருமானவரித் துறையினர் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித்துறையினா், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமாா் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பனையூர் பங்களாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேபோல் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

 

 

 

English Summary

Income tax raid at Vijay's house - Background information

Latest Articles

KOLNews