KOLNews

சென்னையில் அதிகரிக்கப்பட்ட ரெயில் சேவை..!

நேற்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  சென்னை ரெயில்வே கோட்டம் மின்சார ரெயில் சேவையை அதிகரித்து உள்ளது.

அந்த வகையில், சென்ற மாதம் 151 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை , 208 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது .

முன்னதாக இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்'  மூர்மார்க்கெட் ஆவடி , திருவள்ளூர் , அரக்கோணம் , திருத்தணி மார்க்கத்தில் 97 மின்சார ரெயில் சேவையும் , மூர்மார்க்கெட் கும்மிடிப்பூண்டி , சூலூர்பேட்டை மார்க்கத்தில் 48 சேவையும் , சென்னை கடற்கரை , வேளச்சேரி மார்க்கத்தில் 34 ரெயில் சேவையும் , கடற்கரை , தாம்பரம் , செங்கல்பட்டு , திருமால்பூர் மார்க்கத்தில் 88 ரெயில் சேவையும் என 208 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், அதேபோல் , ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும் , பட்டாபிராம் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மார்க்கத்தில் 8 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.  அதன்படி நேற்று முதல் சென்னையில் 279 மின்சார ரெயில்கள் இயக்கபடுகின்றன.

இருப்பினும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத  நிலையில்,ரெயில்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் ஒரிரு நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

Increased train service in Chennai ..!

Latest Articles

KOLNews