KOLNews

இந்தியன் - 2 படப்பிடிப்பில் விபத்து ..! - கலங்கி போன கமல்..!

நேற்று இரவு ‛இந்தியன்-2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. 

அங்கு பாடலுக்காக பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணியின் போது 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கமல் தனது அவர் டுவிட்டரில் பதிவில், " எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்", என பதிவிட்டுள்ளார்.

அதே போல மற்றொரு டுவிட்டில், ‛மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்‛ என பதிவிட்டுள்ளார்.

English Summary

Indian-2 shooting accident - Kamal upset ..!

Latest Articles

KOLNews