KOLNews

தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி..! - அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் ..!

பொதுவாக திமுக ஆட்சிகாலங்களில் தொழில் வளர்ச்சி என்பது, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலேயே அதிகம் காணப்படும். பிற மாவட்டங்களில் அங்கங்கே ஒன்றிரெண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், சென்னையை சுற்றிய 100 கிமி அளவிற்கே முக்கியத்தும் தரப்பட்டு வந்தது. இதுவும் நகரமாயாக்களின் ஒரு பகுதியாக சமூகவியலாளர்களால் பார்க்கப்படுகிறது. 

இதற்கு, தொழிற்சாலைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகள் கொண்ட இடமாக சென்னையும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களும் இருப்பது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை வசதி இன்று அணைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நிலையில்,  விவசாயத்தை, இயற்கை வளத்தை  பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அமைப்பது, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களை வேலைவாய்ப்புக்காக சென்னையை நோக்கி நகரும் அவலத்தை தடுக்கும். 

இந்நிலையில் தற்போது புதிதாய் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இதற்கு முக்கியத்துவம் தரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தவை உள்ளது. அவர், மதுரை , தூத்துக்குடி , விருதுநகர் , சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் , தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர திட்டம் உள்ளது, என்றும், மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள் , நிறுவனங்களை உள்ளடக்கிய Forum அமைத்து , தொழில் சாத்தியக் கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன்,  சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் சலுகைகள் , தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே அமைச்சர் தெரிவிப்பது போல்  அதே வீரியத்துடன் இம்முயற்சி செயலாக்கப்பட்டால் தமிழகத்துக்குள்ளும் , 'வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது' என்பது பொய்யாகும் சூழல் உருவாகும்.

English Summary

Industrial development in the southern districts ..! - Minister Thangam Thennarasu's words of hope ..!

Latest Articles

KOLNews