KOLNews

அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஜய்..? - மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!

நடிகர் விஜய்,  விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன்  திடீர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியல் வட்டாரங்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்தது  நினைவிருக்கலாம். இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஏற்கனவே சந்தித்த மாவட்ட நிர்வாகிகளை தவிர புதிய நிர்வாகிகளையும் விஜய் சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக திருச்சி மதுரை கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள விவரங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து வரும் நிலையில், தற்போது செய்திகள் வெளிப்படையாக தெரிய வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் இந்த திடீர் சந்திப்பில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என எதிர்ர்பார்க்கப்படுகிறது.

English Summary

Is actor Vijay jumping into politics? - Actor Vijay's sudden consultation with forum administrators ..!

Latest Articles

KOLNews