KOLNews

சீனு ராமசாமி உயிருக்கு ஆபத்தா,,? - ட்விட்டர் பதிவையடுத்து போலீஸ் பாதுகாப்பு

தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற  படங்களின் மூலம் அதிகம் பேசப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு  ட்விட்டர் பதிவுவை வெளியிட்டு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.. இந்நிலையில் அவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சீனு ராசாமி. இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அரசு தனக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்த அவர் , கிரிக்கெட் வீரர் முரளிதரன் தொடர்பான 800 படத்தில் நடிக்க வேண்டாமென விஜய் சேதுபதியை தான் கேட்டுக்கொண்டுதாகவும், அவரது நலன் கருதியே இதனை தெரிவித்ததாக கூறினார். ஆனால் அதன் பிறகு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக தெரிவித்தார். சினிமாவில் தனக்கு அரசியல் பற்றி பேச தெரியும் என்றும், ஆனால் திரைத்துறையில் உள்ள அரசியல் தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

English Summary

Is Seenu Ramasamy's life in danger? - Police security following the Twitter post

Latest Articles

KOLNews