KOLNews

அது.. தேடினா கிடைக்காது .! - எதை பற்றி சொன்னார் அந்த முதியவர் ..?

ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார். அவர் அந்த கிராமத்து மக்களால் மிக துரதிர்ஷ்டவசமான மனிதராக பார்க்கப்பட்டார்.

அதற்கு காரணமும் அவர் தான். அவர்  எப்போதும் எதையோ இழந்ததை போல சோர்வாக இருப்பார்.யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசமாட்டார். அவரிடம் யார் வலிய சென்று பேசினாலும், விரக்தியாகவோ அல்லது அவர்களை துரத்தும் விதமாகவே பேசுவார். 

எதுவும் சரியில்லை. எதிர்பார்த்தது எதுவும் நடப்பதில்லை, நினைத்தது போல் வாழ்க்கையில்லை என நம்பிக்கையிழந்த மனநிலையில் பேசுவதுடன், பிறரையும் நம்பிக்கை இழக்க வைக்கும் விதத்தில் இருக்கும் அவர் பேச்சு.

இதனால் கிராமத்தினர், அவர் ஒரு துஷ்ட சக்தி, ராசி இல்லாதவர், சிடு மூஞ்சி , சிரிக்க தெரியாதவர் என பலவாறு குறை .சொல்லுவார்கள்..

இத்தனைக்கு இடையிலும் அவர் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார், மேலும் விஷம் கக்கும் வார்த்தைகளால் . மற்றவர்களிடையேயம்  மகிழ்ச்சியற்ற உணர்வை உருவாக்கினார். இதனால் பலர் அவரை பார்ப்பதை தவிர்த்தனர்.

ஆனால் ஒரு நாள், அவருக்கு எண்பது வயதாகும்போது, நம்பமுடியாத ஒரு விஷயம் நடந்தது. எல்லோரையும் வியப்படைய வைத்தது .

"அந்த  வயதான மனிதன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறான், அவன் எதைப் பற்றியும் புகார் செய்யவில்லை, புன்னகைக்கிறான், அவன் முகம் கூட புத்துணர்ச்சியடைகிறது." என ஒருவன் வந்து கூற, கிராமம் முழுவதும் ஒன்று கூடியது. 

பின் அவர்கள் கூட்டமாக சென்றனர். கூட்டத்தில் இருந்து ஒருவர் கிழவரிடம் கேட்டார், 

 உங்களுக்கு என்ன ஆச்சு ? திடீர்னு மகிழ்ச்சியா இருக்குறீங்களே ..! 

அதற்கு அந்த முதியவர்  “பெரிசா ஒன்னும்  இல்லை. எண்பது ஆண்டுகளாக நான் மகிழ்ச்சியைத் தேடினேன் , ஆனா அதுல பயனில்லைனு இப்ப தான் புரிஞ்சது. அதுனால நான் மகிழ்ச்சி இல்லாம வாழ முடிவு பண்ணிட்டேன்..! அதனால்தான்  இப்போ நான் மகிழ்ச்சியா இருக்கிறேன். "  என்றார்.

கதையின் நீதி -  தேடி கிடைப்பதில்லை மகிழ்ச்சி, திருப்தி அடையும் மனமே மகிழ்ச்சியை உண்டாக்கும்.

English Summary

It .. wont get by searching.! - What that old man says about ?

Latest Articles

KOLNews